ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து இரு தினங்களில் முடிவு: மத்திய அரசு தகவல்

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத் தேர்வுகள் குறித்து இன்னும் இரு தினங்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. 

கோப்புப்படம்

Published On :

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து இன்னும் இரு தினங்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. 

கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு இன்னும் அறிவிக்காமல் உள்ளது. ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் எனத் தகவல் வெளியான நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்த வழக்குகள் விடுமுறை கால சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், அடுத்த 2 நாள்களுக்குள் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்க இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் அதற்காக கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

அதன்படி, வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கொள்கை ரீதியான முடிவெடுக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.