
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.
1956 , நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டது. அன்றைய தினமே மத்தியப் பிரதேசமும் பின் 1966-இல் பஞ்சாபிலிருந்து ஹரியானாவும் 2000-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலமும் உதயமாகியது.
இவை அனைத்தும் நவம்பர் 1-ஆம் தேதியே மாநிலங்களாக அறிவிக்கப்பட்டதால் இந்த 6 மாநிலங்களும் அரசு விழாவாக மாநில தினங்களைக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை அவரவர் மொழிகளிலேயே டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.