
மாநிலங்களிடம் 13 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு
மாநிலங்களின் கையிருப்பில் 13 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 1,12,93,57,545 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,45,61,536 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 104 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...