ஸ்ரீநகர் - ஷார்ஜா நேரடி விமான சேவைக்கு முட்டுக்கட்டை; விவகாரத்தை கையில் எடுத்த இந்தியா

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, வான்வெளியை பயன்படுத்தி கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை பாகிஸ்தான் திரும்பபெற்று கொண்டது.
கோ ஃபர்ஸ்ட் விமானம்
கோ ஃபர்ஸ்ட் விமானம்

ஸ்ரீநகர் - ஷார்ஜா நேரடி விமான சேவைக்கு வான்வெளி வழங்க பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூதர்கள் வழியாக இந்த விவகாரக்கை இந்தியா கையில் எடுத்துள்ளது.

மக்கள் நலன் சாரந்து விமான சேவை இயக்கப்படுவதால் திரும்பபெறும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 23, 24, 26, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்பட்ட முதல் நான்கு விமானங்களை தங்களது எல்லை வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. ஆனால், அக்டோபர் 30ஆம் தேதிக்கு பிறகு, அந்த அனுமதி மறுக்கப்பட்டது.

கடந்த மாதம், ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இச்சேவையை தொடங்கிவைத்தார். ஸ்ரீநகர், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான இந்த விமான சேவையை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் குறைந்த விலையில் நடத்திவருகிறது.

விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிடம் பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது குறித்து தெரியப்படுத்தப்பட்டது. 

இதேபோல், கடந்த 2009ஆம் ஆண்டு, ஸ்ரீநகர் - துபாய் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், வான்வெளி வழங்க பாகிஸ்தான் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, பயணிகளிடையே வரவேற்பு குறைந்தது. இதன் காரணமாக, சேவை நிறுத்தப்பட்டது. அந்த முறை போல் இந்த முறையும், சேவை நிறுத்தப்படுமா என அச்சம் எழுந்துள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் விமானங்களின் பாதை மாற்றப்பட்டால் பயண நேரம் ஒரு மணி நேரம் அதிகமாகும். அதுமட்டுமின்றி, எரிபொருள் மற்றும் பயண கட்டணம் அதிகரிக்கும். ஸ்ரீநகர், ஷார்ஜா இடையே முதன்முதலாக, அக்டோபர் 23ஆம் தேதி விமான சேவை தொடங்கப்பட்டது.

அக்டோபர் 30ஆம் தேதி வரை, விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளி வழியாகத்தான் சென்றது என்றும் நவம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தான், குஜராத் வழியாக அரபிக்கடலில் மேற்கு நோக்கி இயக்கப்பட்டது என்றும் விமான கண்காணிப்பு நிறுவனமான ரேடர்24 தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com