3வது அலை அச்சம்: பெங்களூருவில் சப்தமில்லாமல் நடக்கும் விஷயம்

கரோனா மூன்றாவது அலை உருவாகக் கூடுமோ என்ற அச்சம் காரணமாக, பெங்களூருவில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பூஸ்டர் என்ற முறையில் மூன்றாவது கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்
3வது அலை அச்சம்: பெங்களூருவில் சப்தமில்லாமல் நடக்கும் காரியம்
3வது அலை அச்சம்: பெங்களூருவில் சப்தமில்லாமல் நடக்கும் காரியம்


பெங்களூரு: கரோனா மூன்றாவது அலை உருவாகக் கூடுமோ என்ற அச்சம் காரணமாக, பெங்களூருவில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பூஸ்டர் என்ற முறையில் மூன்றாவது கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறார்கள் என்கின்றன தகவல்கள்.

எக்ஸ்பிரஸ் குழுவினர் தொடர்பு கொண்டு பேசிய பல மருத்துவர்களும், தங்களது முதல் கரோன தடுப்பூசியை 2021 ஜனவரி மாதத்திலும், இரண்டாவது தவணையை சுமார் 8 மாதங்களுக்கு முன்பும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

அவர்கள் இது பற்றி கூறுகையில், தொடர்ந்து கரோனா  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம், தீவிர சிகிச்சைப் பிரிவில் பலரும் அனுமதிக்கப்படுவதைப் பார்க்கிறோம். கரோனா பலிகளும் ஏற்படுகின்றன. கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்திக் கொண்டவர்களிடையே எதிர்ப்பாற்றல் குறைவதையும் பலிகள் ஏற்படுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

வெறும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமல்ல, தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் கூட இதனை செய்கிறார்கள் என்கிறார் பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனை மருத்துவர்.

கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மற்றும் ஜெயதேவா மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் சிஎன் மஞ்சுநாத், கூறுகையில், இது குறித்து தனக்குத் தெரியும் என்கிறார்.

சுகாதாரத் துறையில் பணியாற்றும் பலரும், தங்களது நோய் எதிர்ப்பாற்றலை பரிசோதிக்கிறார்கள். அது அபாயகட்டத்தில் இருந்தம், அச்சம் காரணமாக, பலரும், பூஸ்டர் என்ற பெயரில் மூன்றாவது கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறார்கள். 

எப்படியாகினும், இதுவரை மூன்றாவது கரோனா தடுப்பூசி குறித்து எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்படவில்லை.

இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவே பலரும் இங்கு தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், அவர்கள்தான் மிகுந்த அபாயத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரிக்கிறது. தற்போதும் கரோனா தொற்று பரவி வருகிறது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மூன்றாவது தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த பிரச்னையும் ஏற்படாது, ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்த கொள்கையும் வகுக்கப்படவில்லை என்கிறார் மஞ்சுநாத்.

ஒரு தனியார் மருத்துவமனை செவிலியர் இது பற்றி பேசுகையில், எனது நோய் எதிர்ப்பாற்றலை பரிசோதிக்குமாறு மருத்துவமனை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பரிசோதனயில் அது அபாயக்கட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக நான் மூன்றாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டேன் என்கிறார்.

ஆனால் இதற்கெல்லாம் மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார் தொற்றுநோயியல் துறை மருத்துவர் கிரிதர பாபு. உடலில் ஆன்டிபாடிகள் இல்லையென்றால், நோய் எதிர்ப்பாற்றல் இல்லையென்று அர்த்தமாகாது என்கிறார் இவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com