
இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாத வாடகை கார் ஓட்டுநரைத் தாக்கிய தில்லி பெண்
தில்லியில் தனது இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாத கார் ஓட்டுநரை தாக்கிய பெண்ணின் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தில்லி சாலையில் பெண் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை கடந்து செல்ல முயற்சித்துள்ளார். எனினும் பெண்ணின் வாகனம் கடந்து செல்ல கார் ஓட்டுநர் வழிவிடாமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்
இதனால் ஆத்திரமடைந்த அவர் பரபரப்பான சாலையில் வேகமாக காரைக் கடந்து சென்று கார் ஓட்டுநரை மறித்துள்ளார். தொடர்ந்து கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்த அப்பெண் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கியுள்ளார்.
மேலும் அவரது சட்டையைப் பிடித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | நிகரகுவா அதிபர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை
இச்சம்வத்தை படம்பிடித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். வாடகை கார் ஓட்டுநரை பெண் தாக்கும் இந்த விடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. பெண்ணின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...