ஜெர்மனியில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது உலகின் பல நாடுகளிலும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | நிகரகுவா அதிபர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை
ஜெர்மனி நாட்டில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துவருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பேரிடர் அறிவிக்கப்பட்டதிலிருந்து பதிவான தொற்று பரவல் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவு தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளது. கரோனா 4ஆம் அலை பரவல் ஏற்பட்டுள்ளதால் ஜெர்மனியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | மேடை நகைச்சுவையாளர் வெளியிட்ட விடியோ; சர்ச்சையாக்கிய பாஜக
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,826 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 13 ஆயிரமாக இருந்த நிலையில் தொற்று பரவல் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
மேலும் இதுவரை கரோனாவால் 98,274 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?

விதிமீறல்! விஜய் மீது வழக்குப் பதிவு!

ஊழல் செய்த திமுக அமைச்சா்கள் மீது நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


