ஈரானுக்கு எதிரான போரில் மிகவும் அதிக விலைமிக்க ஆளில்லா விமானமான டிரோனை இழந்ததாக அமெரிக்க கடற்படைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அணுசக்தித் திட்டத்தைக் கைவிடக் கோரி மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப். 28 ஆம் தேதி 'ஆப்ரேஷன் எபிக் ஃபியூரி' என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கின.
போர் தொடங்கி கிட்டத்தட்ட 40 நாள்களுக்குப் பின்னர், சுமார் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்க தாக்குதலில் ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் ஈரான் முனைப்புக் காட்டி வருகிறது.
ஈரான் அணுசக்தித் திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என அமெரிக்கா முறையிட்டு வருகிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப்பேச்சு மீண்டும் இரண்டு நாள்கள் கழித்து தொடங்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.
சுமார் 40 நாள்கள் நடைபெற்ற போரில், அமெரிக்கா இதுவரை 40-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மதிப்பு 720 அமெரிக்க டாலர்கள் என்றும் இந்திய மதிப்பில், ரூ. 7,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தொடக்கம் முதலே அமெரிக்க விமானங்கள் மற்றும் டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அமெரிக்கா, தற்போது சுமார் 24 எம்கியூ4சி (MQ-4C) டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் சுமார் ரூ. 2,300 கோடி மதிப்பிலான டிரோனை இழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை அருகே ஏப். 9 ஆம் தேதி அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதலில் அமெரிக்காவின் கண்காணிப்பு டிரோன்களில் மிக முக்கியமான எம்கியூ4சி டிரைட்டன், செயலிழந்து பாரசீக வளைகுடாவில் விழுந்து காணாமல்போனதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த டிரோனின் மதிப்பு சுமார் 200 முதல் 240 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,300 கோடி. இந்த டிரோனானது மிகத் தீவிரத் தாக்குதல் நடத்தும் 100 மில்லியன் டாலர்கள் கொண்ட எஃப்-35 போர் விமானத்தைவிட இரு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
எம் 4கியூ டிரைட்டன் டிரோனானது சுமார் 50,000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த ஈரானுக்கு எதிரான போரில் இந்த டிரோன் மட்டுமின்றி, இ-3 செண்ட்ரி ஏடபிள்யூசிஎஸ், ஏ10 தண்டர்போல்ட் 2 வார்த்ஹாக், சி-130 ஹெர்குலஸ், எஃப்15இ ஆகிய விமானங்களையும் அமெரிக்கா இழந்திருக்கிறது.
Summary
The United States has lost one of its most advanced and expensive surveillance drones, the MQ-4C Triton, in the Persian Gulf, amid the war in Iran. The drone costs around $200–240 million, which is approximately twice the price of two Lockheed Martin F-35 fighter jets, upgraded versions of which cost nearly $100 million.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிடிவாதம் தளர வேண்டும்!

சீன உளவு செயற்கைக்கோளை ரகசியமாகப் பெற்று அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கிய ஈரான்?

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
