அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது,
இதுபற்றி ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயி பாகேய் பேசுகையில், “பேச்சுவார்த்தையில் பெரும்பாலான விஷயங்களில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதே சரியாக இருக்கும். ஆனால், இதனாலேயே ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகும் என்று யாரும் கூற முடியாது” என்றார்.
மேலும், ”லெபனான் உள்பட பிராந்தியம் முழுவதிலும் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் 14 அம்ச வரைவறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி அதில் எதுவும் சேர்க்கப்படவில்லை. இருதரப்பிலும் வரைவறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே அணுசக்தி திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும்.
கடற்படை முற்றுகை நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தவேண்டும், அதே நேரத்தில், ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்திற்காக ஈரான் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.
ஹோர்முஸ் ஜலசந்தி, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளுக்காக சேவைக் கட்டணங்கள் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுங்கவரி தனியே வசூலிக்கப்படாது” என்றும் அவர் தெரிவித்தார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முரண்பாடாக நடந்துகொள்வதாகவும் நிலைப்பாடுகளை மாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்காக 14 அம்சவரைவினை இறுதி செய்து வருவதாக ஈரான் கூறியதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுரும் ஒப்பந்தம் விரைவில் கைகூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளவர்களை அவசரப்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
Summary
Iran warned agreement was not imminent
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை: சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!
உலகிற்கு ஒரு நல்ல செய்தி! என்ன சொல்லப்போகிறது அமெரிக்கா?

ஈரான் - அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! - சீனா வலியுறுத்தல்!

போர் நிறுத்தம்! ஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் ஒப்பந்தம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



