ஆடைக்குமேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது: தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

ஒரு பெண்ணை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது என்று மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆடைக்குமேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது: தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
ஆடைக்குமேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது: தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

ஒரு பெண்ணை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது என்று மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் துன்புறுத்தலில், பாலியல் ரீதியாக துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் அடிப்படைக் குற்றம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.  நாக்பூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆடைக்கு மேலே ஒரு பெண்ணைத் தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நாக்பூர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 27ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்திருந்தது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர், 2016-ம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாக்பூர் நீதிமன்ற நீதிபதி, ஆடைக்கு மேலே தொடுவது பாலியல் அத்துமீறல் என்ற பிரிவின் கீழ் வராது என்றும், உடலுடன் உடல் உரசுவது மட்டும் தான் பாலியல் தாக்குதல் என்ற சட்டத்தின் கீழ் வரும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிர்ச்சி தரக்கூடிய தீர்ப்பை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், முறையீட்டை வழக்காக தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. 

வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், நாக்பூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com