தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

'சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும்'

சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட மற்ற சட்டங்களை ரத்து செய்யும் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளையும் பிரதமர் மோடி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். 

News image
ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சி எம்.பி. மனோஜ் குமார் ஜா
Updated On :22 நவம்பர் 2021, 11:05 am

DIN

சிஏஏ, என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்யும் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளையும் பிரதமர் மோடி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி எம்.பி. மனோஜ் குமார் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நடக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளையும் பிரதமர் மோடி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) எம்.பி. மனோஜ் ஜா தெரிவித்தார். 

இதுகுறித்து அவர், 'பொதுமக்களின் அழுத்தத்தின் பேரில்தான் விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் மோடி முடிவு செய்தார். வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து 80 இடங்களில் அந்தக் கட்சிகளின் அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர். இப்போது அதுகுறித்து மக்கள் என்ன சொல்வார்கள்? 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) உள்ளிட்ட விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளையும் மத்திய அரசு பரிசீலித்து ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.