காங்கிரஸிலிருந்து 25 எம்எல்ஏ-க்கள், 2 எம்பி-க்கள் தொடர்பில் உள்ளனர்: கேஜரிவால்

​காங்கிரஸ் கட்சியிலிருந்து 25 எம்எல்ஏ-க்கள், 2 எம்பி-க்கள் தொடர்பில் இருப்பதாக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸிலிருந்து 25 எம்எல்ஏ-க்கள், 2 எம்பி-க்கள் தொடர்பில் உள்ளனர்: கேஜரிவால்


காங்கிரஸ் கட்சியிலிருந்து 25 எம்எல்ஏ-க்கள், 2 எம்பி-க்கள் தொடர்பில் இருப்பதாக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பஞ்சாபில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இதையொட்டி இரண்டு நாள் பயணமாக அரவிந்த் கேஜரிவால் பஞ்சாப் சென்றுள்ளார். அமிருதசரஸில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜரிவாலிடம் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் கட்சியிலிருந்து விலகி மற்ற கட்சிகளில் இணைவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு கேஜரிவால் பதிலளித்ததாவது:

"தேர்தலுக்கு முன்பு அனைத்து எம்எல்ஏ-க்களும் கட்சி மாறுவார்கள். கட்சி தாவுவது எல்லா இடங்களிலும் பொதுவான ஒன்றுதான். குறைந்தபட்சம் 25 எம்எல்ஏ-க்கள், 2 எம்பி-க்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து எங்களுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால், எங்களுக்கு அவர்களது குப்பைகள் தேவையில்லை."

கடந்த 6 மாதங்களில் ரூபிந்தர் கௌர் உள்பட 4 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்த சூழலில் அரவிந்த் கேஜரிவால் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். ஜூலையில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் முன்னிலையில் எம்எல்ஏ-க்கள் சுக்பால் சிங் கைரா மற்றும் பிர்மல் சிங், ஜக்தேவ் சிங் என இரண்டு எம்எல்ஏ-க்களும் காங்கிரஸில் இணைந்தனர். 

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்றது. ஆனால், கடந்த 4 1/2 ஆண்டுகளில் 9 எம்எல்ஏ-க்கள் கட்சி மாறியதால், தற்போது சட்டப்பேரவையில் ஆம் ஆத்மியின் பலம் 11 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com