
ராஜேஷ் பூஷன் (கோப்புப் படம்)
ஒமைக்ரான் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில அரசு அதிகாரிகளுடனும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
தென் ஆப்பிரிகாவில் கண்டறியப்பட்டுள்ள அதி வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் என்ற கரோனா தொற்றானது போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பரவி வருகின்றது.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனை அதிகரிக்கவும், விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தவும் மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இன்று அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.