எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

6 மாதத்துக்குப் பின் குறைந்த பாதிப்பு.. நாட்டில் புதிதாக 18,346 பேருக்கு தொற்று

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 18,346 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 6 மாதத்துக்குப் பிறகு பதிவாகும் குறைந்த பாதிப்பாகும்.

News image
6 மாதத்துக்குப் பின் குறைந்த பாதிப்பு.. நாட்டில் புதிதாக 18,346 பேருக்கு தொற்று
Updated On :5 அக்டோபர் 2021, 5:42 am

ANI

புதுதில்லி: நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 18,346 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 6 மாதத்துக்குப் பிறகு பதிவாகும் குறைந்த பாதிப்பாகும்.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் செவ்வாயன்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

29,639 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,31,50,886 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,52,902-ஆக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 97.93 சதவீதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே குறைந்துள்ளது. 

நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமான கேரளத்திலும் தொடர்ந்து பாதிப்பும், பலியும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரத்தில்  8,850 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தொற்றுக்கு 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 57,53,94,042 பரிசோதனைகளும், திங்கள்கிழமை மட்டும் 11,41,642 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.