உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானிலா உள்ளது?: சிவசேனை கேள்வி

உத்தரப் பிரதேச நிர்வாகம் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியை போல் செயல்படுகிறது என சிவசேனை கட்சி மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமரிசித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

லக்கிம்பூர் சம்பவத்தில் பாஜகவின் மீது கடுமையான விமரிசனங்களை வைத்துள்ள சிவசேனை, "உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? அந்த மாநிலத்திற்கு செல்ல இந்தியர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? லக்கிம்பூர் கெரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், லக்னெளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

லக்கிம்பூர் சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டிருப்பது குறித்து சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறுகையில், "லக்கிம்பூர் கெரியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், லக்னெவில் எதிர்க்கட்சி தலைவர்களை அரசு கைது செய்துள்ளது.

இது என்ன மாதிரியான சட்டம்? இந்தியர்கள் அங்கு செல்வதைத் தடுப்பதற்கு உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானிலா உள்ளதா? ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது என்ன புதுவிதமான ஊரடங்கா?

நிர்வாகம் என்பது ஆளுங்கட்சியின் கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போன்று செயல்படுகிறது. அரசு என்ன அறிவுறுத்தல்களை கொடுத்தாலும் அதை அப்படியே பின்பற்றப்படுகிறது. விவசாயிகள் மீது வாகனம் ஏறியதற்கான ஆதாரம் உள்ளது.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார், விமான பயணத்தை மேற்கொள்ள விடாமல் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்படுகிறார். ஒரு மாநில முதல்வரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? நாட்டில் புதிய அரசியலமைப்பு ஏதேனும் உள்ளதா? லக்கிம்பூருக்கு எதிர்க்கட்சி சார்பாக குழுவை அனுப்ப ஆலோசித்துவருகிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com