மீண்டும் வீடுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்: ஆனால்.. இந்த முறை?

அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பதை அறிவிக்கும் நோட்டீஸ்களை ஒட்டும் பணியை மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தொடங்கி வைத்துள்ளார்.
மீண்டும் வீடுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்: ஆனால்.. இந்த முறை?
மீண்டும் வீடுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்: ஆனால்.. இந்த முறை?


மும்பை: மிகப்பெரிய குடியிருப்பு வளாகங்களின் வாயில்களில், இங்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிவாய்ந்தவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பதை அறிவிக்கும் நோட்டீஸ்களை ஒட்டும் பணியை மகாராஷ்டிர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே தொடங்கி வைத்துள்ளார்.

அந்த நோட்டீஸ்களில், எங்கள் சமூகம் பொறுப்புள்ள சமூகம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகங்களின் வாயில்களில், அங்குள்ள தகுதி வாய்ந்த அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், அவர்களை பெருமைப்படுத்தும் வகையிலும், பாராட்டும் வகையிலும் இந்த நோட்டீஸ் ஒட்டப்படும் என்று தாக்கரே அறிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம், முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தி இந்த நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்று மற்ற குடியிருப்பு வளாகங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்றும் கூறினார்.

இதன் மூலம் ஒட்டுமொத்த மகாராஷ்டிர மாநிலமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாற்ற வேண்டும் என்பதே மும்பை மாநகராட்சியின் நோக்கமாக உள்ளது.

இந்த நோட்டீஸில் க்யூஆர் கோட் இடம்பெற்றிருக்கும். அதனை செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்யும் போது, அருகிலிருக்கும் கரோனா தடுப்பூசி மையங்களின் விவரங்களை அதில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 65,62,514 ஆக உள்ளது. புதிதாக 2,026 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,38,962 ஆக உயர்ந்துள்ளது. கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 33,637 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com