'வீட்டில் பணமில்லையென்றால்..' ஆட்சியருக்கு ஒரு திருடனின் கடிதம்

வீட்டில் பணமில்லையென்றால், பிறகு ஏன் பூட்டிச் செல்லவேண்டும் என்று, வீட்டின் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'வீட்டில் பணமில்லையென்றால்..' ஆட்சியருக்கு ஒரு திருடனின் கடிதம்
'வீட்டில் பணமில்லையென்றால்..' ஆட்சியருக்கு ஒரு திருடனின் கடிதம்


வீட்டில் பணமில்லையென்றால், பிறகு ஏன் பூட்டிச் செல்லவேண்டும் என்று, வீட்டின் உரிமையாளருக்கு திருடன் கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வீட்டில் திருட்டு போயிருந்தால், அந்த திருடனின் கைரேகையைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் கடும் முயற்சி எடுப்பார்கள். ஆனால், முதல் முறையாக, ஒரு அரசு அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்த திருடன், வீட்டு உரிமையாளருக்குக் கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகள் குடியிருக்கும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இருந்த காட்டேகான் துணை மாவட்ட ஆட்சியர் திரிலோசன் கௌர், வீட்டுக்குள் நுழைந்த திருடன், திரிலோசன் கௌருக்கு ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றுள்ளார். அதில், "வீட்டில் பணம் எதுவும் வைக்கவில்லையெனில், பிறகு வீட்டை ஏன் பூட்டிவிட்டுச் செல்கிறீர்கள் ஆட்சியரே?" என்று எழுதப்பட்டிருந்தது.

கடந்த இரண்டு வாரங்களாக தனது வீட்டுக்குச் செல்லாமல் இருந்த திரிலோசன் கௌர், கடந்த சனிக்கிழமை வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அங்கு வீட்டிலிருந்து பொருள்கள் அங்குமிங்கும் கொட்டப்பட்டிருந்ததைப் பார்த்தார். வீட்டிலிருந்த சொற்ப பணமும், சின்ன சின்ன நகைகளும் திருடுப்போயிருந்ததையும் அறிந்து கொண்டார்.

உடனடியாகக் காவலர்களுக்குத் தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து வந்து சோதனை செய்த போது இந்தக் கடிதம் சிக்கியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திருட்டுச் சம்பவம் நடந்த வீடு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு உள்பட முக்கிய அதிகாரிகளின் வீடுகளைக் கொண்ட பகுதி என்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com