விவசாயிகள் போராட்டத்தை மத பிரச்னையாக மாற்ற முயற்சி: விவசாயிகள் சங்கம்

தில்லி எல்லை அருகே விவசாயிகள் போராடும் இடத்தில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை மத பிரச்னையாக மாற்ற முயற்சி: விவசாயிகள் சங்கம்
விவசாயிகள் போராட்டத்தை மத பிரச்னையாக மாற்ற முயற்சி: விவசாயிகள் சங்கம்
Published on
Updated on
1 min read

தில்லி எல்லை அருகே விவசாயிகள் போராடும் இடத்தில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 10 மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடமான ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலமானது காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, இறந்த நபர், இறப்பதற்கு முன், தன்னை யாரோ அனுப்பியதாகவும், ரூ.30,000  கொடுத்ததாகவும் தெரிவித்ததாக தகவல் கிடைத்தது. அதற்கான விடியோ ஆதாரம் என்னிடம் இல்லை” எனத் தெரிவித்தார்.

மேலும் இளைஞரின் கொலையில் நிலவும் மர்மம் தொடர்பாக அரசு உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை தலைவர் பஞ்சாபை சேர்ந்த லக்பீர்சிங் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சீக்கியர்களின் மதநூலை அவமதித்ததற்காக அம்மதத்தின் நிகாம் எனும் அமைப்பினர்தான் லக்பீர் சிங் கொலை செய்துள்ளதாகவும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை மத பிரச்னையாக மாற்ற முயற்சி நடப்பதாகத் தெரிவித்துள்ள சம்யுக்தா கிஷான் மோர்சாவின் ஜஹீத் சிங் இளைஞர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com