
’உண்மையை உரக்க சொன்னால்...': நடிகர் சூர்யா டிவிட்
ஜெய் பீம் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் என நடிகர் சூர்யா டிவீட் செய்துள்ளார்.
நடிகர் சூர்யா பல்வேறு சமூகக் கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். குறிப்பாக நீட் தேர்வு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து சமூகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல்நீதியாக அந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.
இதையும் படிக்க | ''திருடன்கள் இல்லாத சாதி இருக்கா ?'' - வெளியானது சூர்யாவின் 'ஜெய் பீம்' பட டீசர்
கரோனா தொற்று பரவல் காலத்தில் நீட் தேர்வை நடத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவிற்கு நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து பரவலாக விவாதப் பொருளானது. திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவிற்கு நடிகர் சூர்யா தெரிவித்த எதிர்ப்பிற்கு மத்தியில் ஆளும் பாஜக தரப்பு கடும்கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடியின பெண்ணின் பிரச்னைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ள சூர்யா வெள்ளிக்கிழமை அத்திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.
இதையும் படிக்க | தீபாவளிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சார்பட்டா பரம்பரை
அத்துடன் தனது சுட்டுரைப்பதிவில் பதிவிட்டுள்ள அவர் உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மகிழ்விப்பதை காட்டிலும், உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய்பீம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Here’s #JaiBhim Teaser for you!
— Suriya Sivakumar (@Suriya_offl) October 15, 2021
Tamil - https://t.co/lJ4mat1vS5
Telugu - https://t.co/iT8vp3OmEw
Watch #JaiBhimOnPrime Nov 2 @PrimeVideoIN @tjgnan @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit #Jyotika @rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/FrxaVluTT2
ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் வெகுவான ஆதரவைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.