

தீபாவளி தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியில் சார்பட்டா பரம்பரை படம் ஒளிபரப்பாகவுள்ளது.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். ஆர்யா நடிப்பில் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைம் ஓடிடியில் சமீபத்தில் வெளியானது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி.
இந்நிலையில் தீபாவளி தினத்தன்று (நவம்பர் 4 ) மாலை 6.30 மணிக்கு சார்பட்டா பரம்பரை படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.