பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; ஏராளமான வெடிபொருள்கள் பறிமுதல்

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

புல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; ஏராளமான வெடிபொருள்கள் பறிமுதல்

Updated On :16 அக்டோபர் 2021, 12:08 pm

ANI


பாம்போர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி உமர் முஸ்தாக் காண்டே இருக்குமிடம் தெரிந்து சுற்றிவளைக்கப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ஆய்வாளர் விஜய் குமார் கூறினார். ஸ்ரீநகர், பகத் பகுதியில் இரண்டு காவலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் இதர குற்றச் செயல்களில் இவருக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பயங்கரவாதி பதுங்கியிருந்த பாம்போர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.