எரிபொருள் விலையேற்றம், மழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு

எரிபொருள் விலையேற்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை காரணமாக, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம், மழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு
எரிபொருள் விலையேற்றம், மழை காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு


எரிபொருள் விலையேற்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை காரணமாக, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது.

காய்கறிகளை வாங்க எடுத்துச் செல்லும் பணம் வெறும் வெங்காயம், தக்காளி வாங்கவே போதாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் சாமானிய மக்கள்.

ஒரு பக்கம், பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டுவிடத் துடிக்கும் நிலையில், பல மாநிலங்களில் வெளுத்துவாங்கும் மழையால், பயிர்கள் நாசமாகி, விளைபொருள்கள் சந்தைக்கு வராமலேயே அழுகியதால், வரத்துக் குறைந்து, விலையை உயர்த்திவிட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக பல மாநிலங்களில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சைக் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்து. ஒரு சில மாநிலங்களில்தான் உருளைக்கிழமை விலை உயராமல் உள்ளது.

வட இந்தியாவை எடுத்துக் கொண்டால், உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே காய்கறிகளின் விலை பெரிய அளவில் உயராமல் உள்ளது. காரணம் அங்கு இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்ததே. ஆனால், தக்காளி... அதன் விலை கிலோவுக்கு ரூ.60 ஐ எட்டியுள்ளது. வெங்காயமும் 10 முதல் 15 ரூபாயிலிருந்து ரூ.20ஐ எட்டிப்பார்த்துள்ளது.  இதர காய்கறிகளின் விலை எப்போதும் போலவே உள்ளன.

சரி இந்த விலை உயர்வு எப்போது சீரடையும் என்று கேட்டால், தற்போதைக்கு இல்லை, மேலும் உயரவேச் செய்யும் என்கிறார்கள் காய்கறி வியாபாரிகள். ஒவ்வொரு நாளும் எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே செல்வதாகவும், பண்டிகைக் காலம் நெருங்குவதாலும், காய்கறிகளின் விலை உயருமே தவிர, குறையாது, வெளி மாநிலங்களிலிருந்து வரும் உருளை, வெங்காயம் போன்றவற்றின் விலைகள், மழை காரணமாக வரத்து பாதிக்கப்பட்டு, தேவை அதிகரிப்பதால் உயர்ந்தே இருக்கும் என்று சில காய்கறி வியாபாரிகள் ஆரூடம் கூறுகிறார்கள்.

ஒட்டுமொத்த காய்கறிச் சந்தைகளிலேயே காய்கறிகளின் விலைகள் 15 முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்து, ஏழைகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது என்று குமுறுகிறார்கள்  இல்லத்தரசிகள்.

காய்கறி கடை நடத்தும் வியாபாரிகளோ, ஒட்டுமொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்து வியாபாரம் செய்கிறேன். இதுவரை 600  - 800 ரூபாய் வரை செலவாகும். இப்போது அதே காய்கறிகளை 1000 - 1200க்கு வாங்கி வருகிறேன் என்கிறார்.

கொல்கத்தாவில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.90 - 93 வரை விற்பனையானது. கத்திரிக்காய் கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.60 ஆக இருந்து, தற்போது ரூ.100ஐ தொட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com