மீண்டும் எரிபொருள் விலை உயர்வு; புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலைகள்

நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் புதன்கிழமையன்றும் மீண்டும் 35 காசுகள் உயர்த்தப்பட்டு, புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. 
மீண்டும் எரிபொருள் விலை உயர்வு; புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலைகள்
மீண்டும் எரிபொருள் விலை உயர்வு; புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலைகள்

புது தில்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் புதன்கிழமையன்றும் மீண்டும் 35 காசுகள் உயர்த்தப்பட்டு, புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த நிலையில் தலைநகர் தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 35 காசுகள் உயர்ந்து முறையே ரூ.106.19க்கும், ரூ.94.92க்கும் விற்பனையாகிறது.

அதே நிலையில், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.112.11 ஆகவும், டீசல் ரூ.102.89 ஆகவும் உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.31 ஆகவும், டீசல் ரூ.99.26 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.106.78 ஆகவும், டீசல் ரூ.98.03 ஆகவும் உள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் உயராமல் இருந்தது. ஆனால், அக்டோபர் 13 முதல் 16 வரை தொடர்ந்து 4 நாள்களும் தினமும் 35 காசுகள் என எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. 
தில்லியில் மட்டும் டீசல் விலை கடந்த 26 நாள்களில் 20 முறை மொத்தமாக ரூ.6.30 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து டீசல் விலை உயர்ந்ததால், நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.100 என்ற அளவில் விற்பனையாகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இதுவரை வரலாறு காணாத விலையாக பெட்ரோல் லிட்டா் ரூ.103.01-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. இதே போல், டீசல் விலையும் லிட்டா் ரூ.99-ஐ நெருங்கியது. இன்று அந்த உச்சத்தையும் தாண்டி புதிய உச்சமாக ரூ.103.31 ஆகவும், டீசல் ரூ.99.26 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே வருகிறது. சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் கிடங்கில் இருந்து பெட்ரோல், டீசல் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு பெட்ரோல் நிலையங்களின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் கிடங்கில் இருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் போது அதற்கான பயணச் செலவும் பெட்ரோல், டீசலிலேயே சோ்க்கப்படும். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு ஏற்படுகிறது.

சென்னையைப் பொருத்தவரை ஜூலை 17-ஆம் தேதி முதல் ஆக.13-ஆம் தேதி வரை உச்சபட்ச பெட்ரோல் விலை ரூ.102.49-ஆக இருந்தது.

கோரிக்கை: இதைக் குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த நாளே அமலுக்கு வந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைந்து, ஆக. 14-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 99.47-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன் பின்னா் தொடா்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை, செப்.28-ஆம் தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. அந்த வகையில், புதன்கிழமை வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை அதிகரித்து, லிட்டா் ரூ.103.31-க்கு விற்பனையானது.

டீசல் விலை: இதே போல், செப். 24-ஆம் தேதி முதல் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இதுவரை இல்லாத உச்சபட்ச விலையாக புதன்கிழமை லிட்டா் டீசல் ரூ.99.26-க்கு விற்பனையானது.

வாகன ஓட்டிகள் கவலை: பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com