தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி: மேற்கு வங்க அரசு

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை வெடிக்க மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே பசுமைப் பட்டாசுகளை வெடிக்க மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் காற்று மாசுபாடு காரணமாக தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாநிலங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில், பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,

“மேற்கு வங்கத்தில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்க அனுமதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இரவு 8 முதல் 10 மணிவரை மட்டுமே மக்கள் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், சத் பூஜைக்கு காலை 6 மணிமுதல் 8 மணிவரையும், கிறிஸ்துமஸ் பண்டிக்கை மற்றும் புத்தாண்டிற்கு நள்ளிரவு 11.55 முதல் 12.30 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com