காந்தி காலத்து விதிகளை மாற்றியமைக்கும் காங்கிரஸ்? ராகுல் காந்தியின் புதிய திட்டம்

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு பல மூத்த தலைவர்கள் பதில் அளிக்க தயங்கிய நிலையில், "எங்கள் மாநிலத்தில் பெரும்பான்மையானோர் மது அருந்துவார்கள்" என சித்து பதில் அளித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநில தலைவர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். மதுவை தவிர்ப்பது, காதி உடைகளை பயன்படுத்துவது போன்ற காங்கிரஸ் கட்சியின் விதிகள் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து நடைபெற்ற கூட்டத்தில், இங்கு யாருக்கு எல்லாம் குடிப்பழக்கம் இருக்கிறது? என மூத்த தலைவர்களை நோக்கி ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் பல மூத்த தலைவர்கள் தயக்கம் காட்டிய நிலையில், "எங்கள் மாநிலத்தில் பெரும்பான்மையானோர் மது அருந்துவார்கள்" என சித்து பதில் அளித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் மது அருந்துக் கூடாது என்ற விதி உள்ளது. இது, அண்ணல் காந்தியடிகளின் காலக்கட்டத்தில், காங்கிரஸ் கட்சியில் கொண்டு வரப்பட்ட விதியாகும். இதன் நடைமுறை சாத்தியம் குறித்தும் காலத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றுவது தொடர்பாகவும் ராகுல் காந்தி, கடந்த 2007ஆம் ஆண்டு, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசியிருந்தார்.

சுழலுக்கு ஏற்ப கட்சியை மறு சீரமைக்க, இந்த விதிகளை மாற்றியமைப்பது அவசியமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போதைக்கு இந்த விதிகளை மாற்றியமைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள செயற்குழுவால் மட்டும்தான் இந்த விதிகளை மாற்றியமைக்க முடியும். 

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த உறுப்பினர் சேர்ப்பு படிவத்தில் பழைய விதிகளே இடம்பெற்றுள்ளன. 

மது, போதை பொருளை தவிர்ப்பது உள்ளிட்ட 10 உறுதிமொழிகளை கட்சியில் சேர விரும்புபவர்கள் அளிக்க வேண்டும். அதேபோல், கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களை பொதுவெளியில் விமர்சிக்க புதிய உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநில தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "நாடு முழுவதும் மேலிருந்து கீழாக அனைவருக்கும் பயிற்சி வழங்கப்படும். கட்சியில் சேர்வதற்கான உறுப்பினர் படிவம் அச்சி மற்றும் இணைய வழயாக அளிக்கப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com