‘மத்திய அரசு ஏழைகள், பழங்குடியினர், தலித் மக்களை புறக்கணிக்கிறது’: ஜார்க்கண்ட் முதல்வர்

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏழைகள், பழங்குடியினர் மற்றும் தலித் மக்களைப் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏழைகள், பழங்குடியினர் மற்றும் தலித் மக்களைப் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

தேசிய பழங்குடியினர் நடன திருவிழாவில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சத்தீஸ்கரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர், “மத்திய அரசின் முடிவுகள் மற்றும் திட்டங்கள் அரசியல்வாதிகளை மட்டுமல்லாது பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் உள்ளன.  பணவீக்கம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவை எந்த நிலையில் உள்ளன? மத்திய அரசின் கவனத்தில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், பழங்குடியினர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் நடமாட்டம் குறித்து கேள்விக்கு பதிலளித்த ஹேம்ந்த் சோரன், “முன்பைவிட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் அமைப்பினரின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com