உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் உரம் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு 4 விவசாயிகள் உயிரிழந்தனர். பல தினங்களாக விவசாயிகள் வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, லலித்பூர் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதி முழுவதும் கடுமையான உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் பிரியங்கா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, லலித்பூர் செல்லும்வழியில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து பிரியங்கா காந்தி கலந்துரையாடினார். கரோனா பொதுமுடக்கத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



