இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.12 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரிவருவாய்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,12,020 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 செப்டம்பர் 2021, 10:31 am

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,12,020 கோடியாக இருந்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1,16,393 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  ரூ.1,12,020 கோடி சரக்கு-சேவை வரி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.20,522 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.26,605 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.56,247 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.8,646 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வரிவருவாயைக் காட்டிலும் நடப்பாண்டு அதே காலகட்டத்தில் 30% அதிகமாக ஜிஎஸ்டி வரிவருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் குறைந்தபட்ச அளவாக ரூ.32,172 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வருவாய் கிடைத்தது. அதுவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சமதிப்பாக ரூ.1,41,384 கோடி வருவாய் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.