இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

'ம்யூ' வகை கரோனாவை கண்காணித்து வருகிறோம்: உலக சுகாதார அமைப்பு

'ம்யூ' என்ற புதிய வகை கரோனாவை கண்காணித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 செப்டம்பர் 2021, 9:57 am

DIN

'ம்யூ' என்ற புதிய வகை கரோனாவை கண்காணித்துவருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொலம்பியாவில் இந்தாண்டு ஜனவரியில் முதல்முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை கரோனாவான 'ம்யூ'-வை கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகள் தேவைப்படும் பட்டியலில் B.1.621 என்ற விஞ்ஞான பெயர் கொண்ட ம்யூ வகையை உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "புதிய மரபியல் மாற்றம் அடைந்த கரோனா வகை தடுப்பூசியை எதிர்த்து போராடும் திறன் கொண்டுள்ளது. இதை மேலும் புரிந்து கொள்ள அடுத்தடுத்த ஆய்வுகள் தேவை. 

மரபியல் மாற்றம் அடைந்த கரோனா வகைகளின் தொகுதியாக 'ம்யூ' வகை உள்ளது. தடுப்பூசி வெளிப்படும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது. அதி தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்சா வகை கரோனா உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், புதிய வகை கரோனா பரவியுள்ளதா என அச்சம் கொள்ளப்படுகிறது. 

கோவிட் - 19க்கு காரணமான SARS-CoV-2 உள்பட பல வைரஸ்கள் கால போக்கில் மரபியல் மாற்றம் அடைந்துவருகிறது. பெரும்பாலான வைரஸ்களின் பண்புகள் மீது மரபியல் மாற்ற அடைந்த வைரஸ்கள் தாக்கங்கள் ஏற்படுத்தவதில்லை. ஆனால், எளிதாக பரவுக்கூடும் தன்மை, வைரஸால் ஏற்படும் தீவிர விளைவுகள், தடுப்பூசிக்கு எதிராக தாக்கு பிடிப்பது உள்ளிட்ட பண்புகள் மீது மரபியல் மாற்றம் அடைந்த வைரஸ்கள் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 

193 நாடுகளுக்கு பரவியுள்ள ஆல்பா, 170 நாடுகளில் பரவியுள்ள டெல்டா ஆகிய நான்கு வகைகளை கவலை அளிக்கும் வகைகளாக உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்தியுள்ளது. ம்யூ உள்பட ஐந்து வகைகள் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.