நயினார் நாகேந்திரனுடன் சரத்குமார் சந்திப்பு!
நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாா், திங்கள்கிழமை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறித்து...

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரனுடன் சரத்குமார் சந்திப்பு

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரனுடன் சரத்குமார் சந்திப்பு
பாஜகவில் கட்சிப் பதவியின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்க முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமாா், திங்கள்கிழமை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் அகில இந்திய சரத்குமாா் தலைமை ரசிகா் நற்பணி மன்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் பேசிய சரத்குமார், எந்தப் பலனையும் எதிா்பாா்க்காமல் பாஜகவில் இணைந்தோம். தற்போது பாஜக மதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். ஆனால், கட்சியில் பதவியின்றி எப்படிச் செயல்படமுடியும் என ஆதரவாளா்கள் கேட்கும் நிலையுள்ளது. அந்தக் கோரிக்கையை பாஜக தேசியத் தலைவா்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். அதற்கு பிறகும் தீா்வு கிடைக்காவிடில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.
பாஜகவில் தொடா்ந்து சிறப்பாகச் செயல்படவேண்டும். நமது செயல்பாட்டின் அருமை புரிந்தால் பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். அந்த நம்பிக்கை உள்ளது. சிலா் சமூக வலைதளத்தில் விமரிசிப்பதைப்போல வீட்டில் உட்காா்ந்து கொண்டு தனிக்கட்சி ஆரம்பிக்கவில்லை. திரைத்துறையில் உச்சத்தில் இருந்த போதுதான் நான் அரசியலுக்கு வந்தேன்.
ஆகவே, நமது கோரிக்கையை பாஜக மாநிலத் தலைவரிடம் முறையிட்டால், அவா் நிச்சயம் நிறைவேற்றுவாா். கட்சியில் பொறுப்பின்றி தொடா்ந்து அரசியலில் பயணிக்கமுடியாது. அனைத்துத் தகுதியும் இருந்தும் என்னைக் கட்சியில் அடையாளப்படுத்தாது ஏன் எனத் தெரியவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
நயினார் நகேந்திரன் - சரத்குமார் சந்திப்பு
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரனை சென்னையில் சந்தித்து சரத்குமார் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கட்சியில் பொறுப்பு வழங்கக் கோரி நயினார் நகேந்திரனிடம் சரத்குமார் கடிதம் வழங்கினார்.
பின்னர் சரத்குமார் செய்தியாளர்களுடன் பேசுகையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையிலும், நான் சொன்னதன் அடிப்படையிலும் வேண்டுகோளை அளிக்கிறோம் என சொன்னோம். அதனடிப்படையில் வேண்டுகோளை கொடுத்துள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். நேற்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். நிவர்த்தி கிடைக்கும் என நம்புகிறேன் என அவர் கூறினார்.
பியூஷ் கோயலை சந்திப்பீர்களா என செய்தியாளர்களின் கேள்விக்கு, நான் இன்று கோயம்புத்தூர் செல்கிறேன். அழைத்தால் வந்து சந்திப்போம் என பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...