அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார்.
அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா கடந்த 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவரது விலகல் கடிதத்தை காங்கிரஸ் உயர்மட்டக் குழு ஏற்கவில்லை. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதே நேரத்தில் ராகுல் காந்தியும் அவருடன் பேசினார். தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அவர் நேரம் கேட்டிருந்தார். ஆனால் மறுநாள், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவரது இல்லத்திற்குச் சென்று பிப்ரவரி 22ஆம் தேதி பூபென் குமார் போரா பாஜகவில் இணைவதாக அறிவித்தார்.
அதன்படி, பாஜக மாநிலத் தலைவர் திலீப் சைகியா முன்னிலையில் பூபென் குமார் போரா ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தார். அசாம் பாஜக தலைமையகமான 'வாஜ்பாய் பவனில்' நடைபெற்ற நிகழ்ச்சியில் போரா பாஜக உறுப்பினரானார். அவருடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சு போராவும் பாஜகவில் இணைந்தார்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Former Assam Congress chief Bhupen Kumar Borah on Sunday joined the ruling BJP in the presence of its state unit president Dilip Saikia here.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அஸ்ஸாம் எம்பி பிரத்யுத் போர்டோலாயின் ராஜிநாமா ஏற்பு!
தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!

பாஜகவில் இணைந்தவர்கள் முக்கியமற்றவர்களாக மாறிவிட்டனர்: காங்கிரஸ் தலைவர்!

அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் விலகல்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


