
'நாட்டின் மிகச்சிறந்த நாளாக மாறிய ஆக. 31'
ஆகஸ்ட் மாதத்தின் இறுதி நாளான 31-ம் தேதி இந்தியாவின் மிகச்சிறந்த நாளாக மாறியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், நாட்டில் நேற்று (ஆக. 31) ஒரு நாளில் மட்டும் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
படிக்க | தடுப்பூசி கிடைப்பதை எளிமையாக்கும் மத்திய அரசின் புதிய முயற்சி
மேலும், நடப்பு நிதியாண்டில் மார்ச் - ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
படிக்க | 'ம்யூ' வகை கரோனாவை கண்காணித்து வருகிறோம்
இதனைத் தொடர்ந்து பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிந்த நிலையில், சென்செக்ஸ் 57,552 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தையும் அடைந்துள்ளதாக அமைச்சர் மாண்டவியா பதிவிட்டுள்ளார்.
August 31 was an extraordinary day for India.