
கரோனா பரவல் காரணமாக கேரள எல்லையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.
இதேபோன்று தமிழகம், கர்நாடக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த இரு மாநில அரசுகளுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் கேரளத்தில் கரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருவதால், கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம், கர்நாடக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.