நிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு அபிஷேக் பானா்ஜியின் மனைவி கடிதம்

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கேட்டு அமலாக்கத்துறைக்கு அபிஷேக் பானா்ஜியின் மனைவி ருரிஜா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்குக் கேட்டு அமலாக்கத்துறைக்கு அபிஷேக் பானா்ஜியின் மனைவி ருரிஜா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க முறைகேடு புகாா்கள் தொடா்பாக விசாரிக்க திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, அவருடைய மனைவி ருஜிரா ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இந்நிலையில், தான் இரண்டு கைக்குழந்தைகளுக்கு தாய் என்றும் பெருந்தொற்றுக்கு மத்தியில் தில்லிக்கு பயணம் செய்வதை தவிர்க்க நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி அமலாக்கத் துறைக்கு ருஜிரா கடிதம் எழுதியுள்ளார்.

அபிஷேக் பானா்ஜி, செப்டம்பா் 6-ஆம் தேதியும், ருஜிரா செப்டம்பா் 1-ஆம் தேதியும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறைக்கு ருஜிரா எழுதிய கடிதத்தில், "நான் இரண்டு கைக்குழந்தைகளுக்கு தாய். பெருந்தொற்றுக்கு மத்தியில் தில்லிக்கு தனியாக வருவதால் எனக்கும் எனது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். 

எனவே, எனது வீடு அமைந்துள்ள கொல்கத்தாவில் உள்ள அமலாகத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக நீங்கள் பரிசீலித்தால் வசதியாக இருக்கும். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு குறித்து விசாரணையும் மேற்குவங்கத்தில் தான் நடைபெற்ருவருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

முதல்வா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானா்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறாா். மாநிலத்தில் குனுஸ்தோரியா, கஜோரா ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் நிா்வகித்து வருகிறது.

அந்தப் பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, வெளிச்சந்தையில் விற்கப்படுவதாகப் புகாா் எழுந்தது. அதில், அபிஷேக் பானா்ஜி, அவருடைய மனைவி ருஜிரா ஆகியோா் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஐ கடந்த ஆண்டு நம்பா் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் ருஜிராவிடம் ஏற்கெனவே சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. சட்ட விரோத நிலக்கரி விற்பனை மூலம் அபிஷேக் பானா்ஜி ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அவா் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கில் இதுவரை திரிணமூல் காங்கிரஸ் இளைஞா் அணித் தலைவா் வினய் மிஸ்ராவின் சகோதரா் விகாஸ் மிஸ்ரா, முன்னாள் காவல் துறை அதிகாரி அசோக் குமாா் மிஸ்ரா ஆகிய இருவரையும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com