47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உ.பி.யில் 20 நாய்கள் விஷம் வைத்துக் கொலை: முதல் தகவல் அறிக்கை பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் விஷம் கலந்த உணவைக் கொடுத்ததில் 20 நாய்கள் பலியாகின.

News image
உ.பி.யில் 20 நாய்கள் விஷம் வைத்துக் கொலை: முதல் தகவல் அறிக்கை பதிவு
Updated On :6 செப்டம்பர் 2021, 7:46 am

PTI


மஹோபா: உத்தரப்பிரதேச மாநிலம் ஸ்ரீநகல் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் விஷம் கலந்த உணவைக் கொடுத்ததில் 20 நாய்கள் பலியாகின.

இது குறித்து பசௌரா கிராமத் தலைவர் சுக்நந்தன் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில், அந்த கிராமத்துக்கு வந்த சிலர், ரொட்டிகளில் விஷம் கலந்து அங்கிருந்த நாய்களுக்குக் கொடுத்துள்ளனர். இதில் 20 நாய்கள் பலியாகின. பல நாய்கள் விஷம் கலந்த உணவை உண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

நாய்களை விஷம் வைத்துக் கொன்றவர்கள் யார், அவர்கள் எதற்காக அவ்வாறு செய்தார் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.