எல்.ஜி.பி.டி.க்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: 3 ஆண்டுகள் நிறைவு!

தன்பாலினச் சேர்க்கை குற்றமில்லை என்றும், அதைக் குற்றமாகக் கருதும் இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவு 377 செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது.
எல்.ஜி.பி.டி.க்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: 3 ஆண்டுகள் நிறைவு!


தன்பாலினச் சேர்க்கை குற்றமில்லை என்றும், அதைக் குற்றமாகக் கருதும் இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவு 377 செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது.

பாலினம் என்ற சொல் முந்தைய காலத்தில் ஆண், பெண் என இருந்த நிலையில் தற்போது அதனை ஒரு குறுகிய வட்டத்தில் சுறுக்கிவிட முடியாத அளவிற்கு  எல்.ஜி.பி.டி. ( LGBT )அமைப்பு தன் பாலினச் சேர்க்கை இயல்புகளைக் கொண்ட சமூகத்தை உருவாக்கியிருக்கிறது.

’லெஸ்பியன்’ என்றால்  ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்வது, ’கேய்’ என்றால் ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்வது, ’பைசெக்ஸுவல்’ என்றால் எந்த பாலினம் நபர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது, டிரான்ஸ்ஜெண்டர் (திருநங்கைகள் அல்லது திருநம்பி ) மூன்றாம் பாலினமாகக் கருதப்படுவார்கள்.  

இந்திய தண்டனையியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 377ஆவது பிரிவில், இயற்கைக்கு முரணான உறவை குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இயற்கைக்கு முரணாக ஆண், பெண் அல்லது விலங்குகளுடன் யார் உறவு வைத்தாலும், அது ஆயுள் சிறைத் தண்டனைக்குரிய குற்றம் அல்லது 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை விதிக்கத்தக்க குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள இந்த பிரிவை எதிர்த்து பல தன் பாலின விருப்பங்கள் கொண்டவர்களின் உரிமைக்குக் குரல்கொடுக்கும் LGBTQ அமைப்புகள் தொடர்ந்து சட்டரீதியாக தன்பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதைக் குற்றச் செயல் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் போராடி வந்தன. 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு செப்.6 2018-ஆம் ஆண்டு இதுதொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் கூறியதாவது; "நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போது ஏற்புடையதாக இருக்காது. தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல. தன்பாலினச் சேர்க்கையைக் குற்றமாக வரையறுக்கும் அரசியல் சட்டப் பிரிவு 377 செல்லாது."

மேலும், "ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும்பட்சத்தில் யாரும் அவர்களுடைய தனிப்பட்ட தன்மைகளிலிருந்து விடுபட முடியாது. தனிப்பட்ட தன்மைகளை ஏற்பதற்கான சூழல் நாட்டில் உள்ளது. தனிப்பட்ட உரிமைகள் தடை செய்யப்படுமானால் அது மரணத்திற்கு சமம் என்பதால் பிற மனிதர்களைப் போலவே இயல்பான மனிதர்களாகவும், அடிப்படை உரிமைகளுடனும் இருக்கும் உரிமை எல்.ஜி.பி.டி. சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உள்ளது" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. தன்பாலினச் சேர்க்கை இயல்புகளைக் கொண்ட சமூகத்தினரிடையே இந்தத் தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com