ரயில் இருக்கையைத் தேடி உணவு வர வேண்டுமா? இதோ இலவச எண் 

கரோனா பேரிடர் காரணமாக, பல்வேறு வசதிகளை நிறுத்தி வைத்திருந்த இந்திய ரயில்வே, தற்போது பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
ரயில் இருக்கையைத் தேடி உணவு வர வேண்டுமா? இதோ இலவச எண்
ரயில் இருக்கையைத் தேடி உணவு வர வேண்டுமா? இதோ இலவச எண்
Published on
Updated on
1 min read


கரோனா பேரிடர் காரணமாக, பல்வேறு வசதிகளை நிறுத்தி வைத்திருந்த இந்திய ரயில்வே, தற்போது பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பால், ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.

இது குறித்து இந்திய ரயில்வே தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இந்திய ரயில்வேயின் உணவு மற்றம் சுற்றுலாக் கழகம் இருக்கும் போது, இனி ரயில் பயணத்தின் போது யாருமே பசியோடு செல்ல வேண்டியது இருக்காது.

நீண்ட பயணமோ, குறுகிய பயணமோ, உங்கள் ரயில் பயணத்தின் போது மிக எளிதாகவே உணவை ஆர்டர் செய்து பெற முடியும். அதுவும் உங்கள் இருக்கைக்கே வந்துசேரும். இதற்காக ரயில் பயணிகள் ரயில்வேயின் இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

அல்லது ஐஆர்சிடிசியின் இணைய உணவுவழங்கலுக்கான ஐஆர்சிடிசி ஃபூட் ஆன் டிராக் எனற செயலியை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் உங்களுக்குப் பிடித்த உணவுகளை உங்கள் இருக்கைக்கே வரவழைக்க முடியும்.

அதுவும் இல்லையா, உங்கள் செல்லிடப்பேசியில் 1323 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டும் உணவு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து பிறகு படிப்படியாகத் தொடங்கிய நிலையில், உணவு வழங்கும் சேவையை மட்டும் தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது புதிய வேகத்துடன் உணவு வழங்கும் சேவையும் நடைமுறைக்கு வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com