வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இந்தியாவில் ஒரேநாளில் 26,041 பேருக்கு கரோனா; 276 பேர் பலி

இந்தியாவில் இன்று மேலும் 26,041 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
கோப்புப்படம்
Updated On :27 செப்டம்பர் 2021, 4:15 am

DIN

இந்தியாவில் இன்று மேலும் 26,041 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,041 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.36 கோடியாக உயர்ந்துள்ளது. 
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 276 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,47,194 ஆக உயா்ந்துள்ளது.  கரோனாவிலிருந்து இன்று 29,621 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,29,31,972 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2,99,620 ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் 38,18,362 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 86.01 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
நேற்று ஒரேநாளில் 11,65,006 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 56,44,08,251 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.