பஞ்சாப்: அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்கீடு

பஞ்சாபில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி செவ்வாய்க்கிழமை துறைகளை ஒதுக்கினார்.
பஞ்சாப்: அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்கீடு


பஞ்சாபில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி செவ்வாய்க்கிழமை துறைகளை ஒதுக்கினார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை கடந்த 18-ம் தேதி ராஜிநாமா செய்தார். இதன்பிறகு, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சரண்ஜீத் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வராகப் பதவியேற்ற பின், சரண்ஜீத் சிங் சன்னி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். அதில் புதிய முகங்கள் 7 பேர் உள்பட 15 பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.  

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பொது நிர்வாகம், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு உள்பட 14 துறைகளைத் தன்வசம் வைத்துக்கொண்டுள்ளார். துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவுக்கு உள்துறை, சிறைத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வர் ஓ.பி. சோனிக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் பிரம் மொஹிந்த்ராவுக்கு உள்ளாட்சித் துறை மற்றும் அவை விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளன. நிதித் துறை மூத்த அமைச்சர் மன்பிரீத் சிங் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய முகங்களில் ரண்தீப் சிங் நபாவுக்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமரீந்தர் சிங் ராஜாவுக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com