ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முன்பதிவை ரத்து செய்த இந்திய மருத்துவமனைகள்; காரணம் என்ன?

விற்பனை மந்தமாக இருப்பதாலும் சேமித்து வைத்து கொள்ள மிகவும் குளிர்ந்த சேமிப்பு தேவைப்படுவதாலும் முன்று இந்திய மருத்துவமனைகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஆர்டர்களை ரத்து செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தடுப்பூசிகளை மக்களுக்கும் செலுத்தும் பணி தீவிரப்படுத்துப்பட்டுவருகிறது. குறிப்பாக, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விற்பதில் சிரமம் ஏற்பட்டதாலும் மற்ற தடுப்பூசிகளை அரசு இலவசமாக வழங்கிவருவதாலும் இந்திய மருத்துவமனைகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஆர்டர்களை ரத்து செய்துள்ளது.

மக்களிடையே ஸ்புட்னிக் வி தடுப்பூசி மீதான வரவேற்பு குறைந்ததாலும் தடுப்பூசியை சேமித்து வைத்து கொள்ள மிகவும் குளிர்ந்த சூழல் தேவைப்படுவதாலும் மூன்று இந்திய மருத்துவமனைகள் அதன் ஆர்டர்களை ரத்து செய்துள்ளதாத நிபுணர்கள் கூறுகின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விற்கப்பட்டுவருகிறது.

புனேவில் இயங்கிவரும் பாரதி வித்யாபிரித் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மூத்த அலுவலர் ஜிதேந்திர ஒஸ்வால் இதுகுறித்து கூறுகையில், "சேமித்து வைத்து கொள்வதில் பிரச்னை இருப்பதால் முன்பதிவு செய்யப்பட்ட 2,500 தடுப்பூசிகளை ரத்து செய்துள்ளோம். மக்களிடையேயும் அதன் மீது பெரிய வரவேற்பு இல்லை. ஸ்புட்னிக் வி போட்டுக்கொள்ள 1 சதவிகித்தினரே முன்வந்துள்ளனர். மீதமுள்ள தடுப்பூசிகளை வைத்து என்ன செய்வது?" என்றார்.

மே மாதம் தொடங்கி கடந்த வாரம் வரை, இந்தியா முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 6 சதவிகிதம் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டுள்ளது. 75 சதவிகித தடுப்பூசிகள் அரசின் மூலமாகவும் 25 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் விற்பனை செய்ய அரசு வரம்பு நிர்ணயித்திருந்தது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, 850 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. உள்நாட்டு சந்தையில், அதன் வரவேற்பு குறைந்துள்ளதால், மற்ற நாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து, இதுவரை மொத்தமாக 943,000 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com