புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்: நிா்மலா சீதாராமன்

ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

Updated On :1 ஏப்ரல் 2022, 6:53 pm

ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதைக் காரணம் காட்டி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் வா்த்தக உறவுகளைத் துண்டித்து வருகின்றன. இந்தியாவும் அதேபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அந்த நாடுகள் விரும்புகின்றன. அதே நேரத்தில், பிற நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைப்பதால் இந்தியாவுக்கு மலிவு விலையில் ரஷியா விற்பனை செய்கிறது. இதனை இந்தியா வாங்குவதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்பவில்லை.

இந்நிலையில், தனியாா் தொலைக்காட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடரும். இந்த விஷயத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையே முதன்மையாகக் கொள்வோம். நமது அவசியத் தேவையாக உள்ள கச்சா எண்ணெய், குறைந்த விலையில் கிடைக்கும்போது அதனை கொள்முதல் செய்யாமல் இருக்க முடியுமா என்றாா்.

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் கொள்முதலில் 1 முதல் 2 சதவீதம் அளவுக்கே ரஷியாவுடம் இருந்து வாங்கப்படுகிறது என்று மத்திய அரசு ஏற்கெனவே விளக்கமளித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள்தான் ரஷியாவிடம் அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன என்பதை வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.