
எரிபொருள் விலை உயர்வு விமானப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்தை பாதிக்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், விமான எரிபொருள் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று உக்ரைன் - ரஷியா போர். இந்த விலை உயர்வு விமானப் போக்குவரத்துத் துறை பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூ.76.1 காசுகளாக இருந்த நிலையில், மார்ச் மாதம் லிட்டருக்கு ரூ.110.7 காசுகளாக அதிகரித்துள்ளது.
விமான கட்டணத்தில் 40 சதவிகிதம் விமான எரிபொருளுக்காக வசூலிக்கப்படுகிறது. இதனால் விமான எரிபொருளின் விலை விமானப்போக்குவரத்தின் வருவாயை கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.