
பெங்களூரு: இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை கா்நாடகம் வருகை தந்த ராகுல்காந்தி, பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து தும்கூரில் உள்ள சித்தகங்கா மடத்திற்குச் சென்று மறைந்த சிவகுமார சுவாமிகளின் 115ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா்.
பின்னர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
ராகுல்காந்தி உடன் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோர் உடன் இருந்தனர்.
புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி தனது 46 வயதில் மாரடைப்பால் காலமானார். நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித், அவரது ரசிகர்களால் அன்புடன் 'அப்பு' என்று அழைக்கப்பட்டவர்.
புனித் ராஜ்குமாரின் மனைவி, மகளுடன் ராகுல்காந்தி
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை கா்நாடகம் வருகை தந்த ராகுல்காந்தி, புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து ராகுல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன். புனித் இளம் வயதிலேயே அனைத்து கன்னடர்களுக்கும் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார்" என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அக்கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் எம்பி பாட்டீல், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச் முனியப்பா ஆகியோரும் சென்றனர்.
2023 ஆம் ஆண்டு கா்நாடகம் சட்டப்பேரவைக்கு தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், சித்தகங்கா மடத்திற்கு ராகுல்காந்தி வருகை தந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.