குறைந்து வரும் தொற்று பாதிப்பு: கோவாக்‍சின் தடுப்பூசி உற்பத்தியை குறைக்‍க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு

கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து,  ஏறக்குறைய பதினெட்டு மாதங்கள் உழைப்பிக்கு பின்னர், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியின் வேகத்தை தற்காலிகமாக‍ குறைக்‍க பாரத் ​பயோடெக் முடிவெடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, ஏறக்குறைய பதினெட்டு மாதங்கள் உழைப்பிக்கு பின்னர், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியின் வேகத்தை தற்காலிகமாக‍ குறைக்‍க பாரத் ​பயோடெக் முடிவெடுத்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்‍கும் வகையில் தடுப்பூசி கண்டுபிடித்து தயாரிக்‍கும் முயற்சியில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கின. இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு நிறுனமான பாரத் பயோடெக் நிறுவனமும் கோவாக்‍சின் என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விநியோகம் செய்து வருகிறது. 

இந்நிலையில், தற்போது கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்துள்ளதாலும், எதிர்காலத்தில் அந்த மருந்தின் தேவை குறைந்துள்ளதை அடுத்து செயல்முறை பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் நடவடிக்கையாக கோவாக்சின் உற்பத்தியை தற்காலிகமாக குறைக்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

கரோனா வேகமாக பரவிய காலத்தில் போதுமான அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாதபோதும், உலக தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய உயர் முன்னுரிமை அளித்ததாக தெரிவித்துள்ள பாரத் பயோடெக், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு தொடர்ந்து தரமேம்பாட்டுக்‍கான உத்தரவாரத்தை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனுபவ தரவு மற்றும் சான்றுகளின் அடிப்படையில், கோவாக்சின் அனைத்து சந்தைப்படுத்தலுக்குப் பிந்தைய கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபித்துள்ளது. மேலும், 10 லட்சத்துக்தும் அதிகமான கோவாக்சின் டோஸ் மருத்துவ பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் அடிப்படையில் பாதுகாப்பு தீவிரமாக ஆவணப்படுத்தப்பட்டது. இறுதியில், 10 க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அடிப்படையில் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது.

இதற்கிடையில், தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லாததால் தடுப்பூசி சான்றிதழ்கள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com