கரௌலி வன்முறை: ஏப்ரல் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ராஜஸ்தானின் கரௌலியில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 7-ம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கரௌலி வன்முறை: ஏப்ரல் 7 வரை ஊரடங்கு நீட்டிப்பு
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானின் கரௌலியில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 7-ம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

கரெளலியில்  புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஹிந்து சமூகத்தினர் நடத்திய இருசக்கர வாகன ஊர்வலம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கரெளலி பகுதிக்கு வந்தபோது ஹிந்துக்களின் ஊர்வலத்தின் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடா்ந்து நிகழ்ந்த வன்முறையில் இருசக்கர வாகனங்கள், கடைகளுக்குத் தீவைக்கப்பட்டது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 35 போ் காயமடைந்தனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக ஏப்ரல் 2-ம் தேதி மலை 6.30 மணி முதல் ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கரௌலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மத ஊர்வலத்தின் போது கல் வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் காவல்துறை 46 பேரைக் கைது செய்தது மற்றும் ஏழு பேரை விசாரணைக்காகக் காவலில் வைத்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ராஜஸ்தானின் கரௌலி நகரில் வன்முறை மோதலை அடுத்து இது நடந்துள்ளது. இதற்கிடையில், ராஜஸ்தான் காங்கிரஸும் கரௌலி சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது.

இந்த குழுவில் எம்எல்ஏக்கள் ஜிதேந்திர சிங், ரபீக் கான் மற்றும் கரௌலி மாவட்ட பொறுப்பாளர் லலித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு கரௌலி சென்று அதன் அறிக்கையை ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியிடம் சமர்ப்பிக்கும். 

இந்நிலையில், மக்களின் நலன் கருதி வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 7-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com