நவராத்திரிக்காக தில்லியில் இறைச்சி கடைகளை மூட மேயர் உள்பட யாருக்கும் அதிகாரமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகித் கோகலே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெற்கு தில்லி நகராட்சி ஆணையருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தில்லியிலுள்ள நவராத்திரியையொட்டி அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிட்டது தவறானது என்று சுற்றறிக்கை விட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், நினைத்த சட்டங்களை இயற்ற தில்லி ஒன்றும் கற்பனை நகரம் அல்ல. தில்லியில் இறைச்சிக் கடைகளை மூட மேயர் உள்பட யாருக்கு அதிகாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நவராத்திரி விழாவையொட்டி தில்லியில் இறைச்சி விற்பனை கூடாது என தில்லி தெற்கு, கிழக்கு மேயர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 9 நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்இந்தியாவை காட்டிலும் வடஇந்திய மாநிலங்களில் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...

முத்தான முத்தல்லவோ...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

