உலகின் பல நாடுகளில் மக்கள் வாக்குரிமைக்காகப் போராடியுள்ளனர். எண்ணற்றோர் தங்களது உயிரை அர்ப்பணித்துள்ளனர். அந்த வரலாற்றின் பின்னணியில் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பான வாக்குரிமையை முதல்முறையாகப் பயன்படுத்தப் போகிறோம் என்ற எண்ணம் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
தமிழ்நாட்டு சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ள நிலையில், முதல் முறையாக வாக்களிக்க உள்ள சிலரிடம் பேசியபோது அவர்கள் கூறியது:
மு.ஜெ.பிரசன்னா, சென்னை
நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான சிறிய சக்தி வாய்ந்த கருவியே வாக்குரிமையாகும். முதல் வாக்கு விழிப்புணர்வை அளிக்கிறது. 'யாருக்கு வாக்களிக்கிறோம்? அவர்களின் கொள்கைகள் என்ன? அவர்கள் சமூகத்துக்குச் செய்தது என்ன?' போன்ற கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன.
இதுவே விழிப்புணர்வான குடிமகனாக என்னை மாற்றுகிறது. சிந்தித்து எடுக்கும் முடிவே உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம். இளைஞர்கள்தான் சமூக மாற்றத்தின் முக்கிய சக்தி. முதல் வாக்கே எதிர்கால அரசியலை வடிவமைக்கும் திறன் கொண்டது. இளைஞர்கள் விழிப்புணர்வுடன் வாக்களித்தால்தான் அரசியல் தரம் உயரும். முதல் வாக்கு என்பது மாற்றத்தின் தொடக்கம்.
ஞா.சுபஸ்ரீ, மதுரை
முதன்முறையாக ஜனநாயகச் செயல்முறையில் நேரடியாகப் பங்கேற்கப் போகிறேன் என்கிற உற்சாகம் உள்ளது. வாக்களிப்பது என்பது சிறிய செயல் போல் தோன்றினாலும், அது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பும்கூட! என் விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் வாக்கின் மூலமாக வெளிப்படுத்தும் மிகப் பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இது நாட்டின் மீதான அக்கறையை அதிகரிக்கிறது. எனது முதல் வாக்கு ஜனநாயகத்தின் மதிப்பையும், என் பொறுப்பையும் வாழ்நாள் முழுவதும் நினைவூட்டும்.
வர்தினி ராஜேஷ், கோவை
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஒவ்வொரு தேர்தலின்போதும் எங்கள் ஊரில் தெருக்களில் சுவரொட்டிகள், பதாகைகள், பிரசாரங்கள் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தும். வேடிக்கை மனிதனாக மட்டுமே இருந்த எனக்கு இந்த முறை ஒரு தனிப்பட்ட ஆர்வம் தொற்றியுள்ளது. அதுதான் எனது முதல் வாக்கு. வாக்காளர் அடையாள அட்டையானது எனக்குள் ஒரு பெரிய பொறுப்புணர்வைக் கொடுத்துள்ளது.
இதுவரையில் பிறர் வாக்களித்து விட்டு வரும்போது விரலில் இருக்கும் அந்த நீல நில மையைப் பார்த்து பொறமைப்பட்டுள்ளேன். ஒரு குடிமகனின் அதிகாரத்தைப் பறைசாற்றும் அடையாளமாக அது எனக்குத் தோன்றியது. வேட்பாளர்களின் தகுதிகளை ஆராய்வதும், சமூகத்தின் தேவைகளைப் புரிந்துகொள்வதும் வாக்காளரின் கடமை. அதை சரியான முறையில் பயன்படுத்துவேன்.
ஆ.மு.வர்ணிகா, சேலம்
என் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளை யார் எடுக்க வேண்டும் என்று நான் தீர்மானிக்கிறேன். அந்தத் தீர்மானம்தான் ஜனநாயகத்தின் அடித்தளம். நாம் எவ்வாறு சமூகத்தில் பங்கேற்கிறோம் என்பதே உண்மையான அடையாளமாகிறது. அந்த அடையாளத்தை உருவாக்கும் முதல்படியாக வாக்கைப் பதிவு செய்கிறோம். நாட்டுக்காக ஒரு முடிவு எடுத்தேன் என்று பெருமையாகச் சொல்லும் தருணம் அது. வாக்காளர் பட்டியலில் நம் பெயரைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, வாக்குச் சாவடியில் நின்று காத்திருக்கும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு, வாக்கு இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் அந்தச் சிறிய செயலின் பின்னால் உள்ள பெரிய அர்த்தம் போன்ற அனைத்தும் மறக்க முடியாத அனுபவங்களாக மாற்றும்.
பா.உமாமகேஸ்வரி, ஆலங்குளம்
முதல் வாக்கு என்பது வெறும் விரலில் மை பதிப்பது மட்டுமல்ல; 'நான் இந்த சமூகத்தின் ஓர் அங்கம்' என்று சொல்லும் ஓர் உரிமை. தமிழ்நாட்டின் ஆட்சியின் அதிகாரத்தை யாருடைய கையில் கொடுக்கலாம் என்ற வெற்றியைத் தீர்மானிக்கிற வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது. வீட்டில் யார் என்ன கூறினாலும், அதனை புறந்தள்ளிவிட்டு வாக்கை செலுத்த காத்திருக்கிறேன்.
என்னுடைய வாக்கை யாருக்கும் நான் விற்க மாட்டேன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் சில தருணங்கள் சாதாரணமாகத் தோன்றினாலும், அவை அடையாளத்தையும், பொறுப்பையும் ஆழமாக வெளிப்படுத்தும். என்னுடைய முதல் வாக்கை நான் பதிவு செய்வதற்குக் காத்திருக்கிறேன். வாக்கு ஓரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம், தவறானவர்களை நிராகரிக்கலாம்.
பொ.ஜெயச்சந்திரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்: மயிலாடுதுறை!

”கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என் ஆசை!” திருமாவளவன் | VCK | MNM
பயணங்களுக்கான எரிபொருள்
ஏ.ஐ. இல் சுயசரிதை!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


