விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பெட்ரோல், டீசல் விலை 76 பைசா அதிகரிப்பு

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையானது தலா 76 பைசா இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

News image

பெட்ரோல், டீசல் விலை 76 பைசா அதிகரிப்பு

Updated On :6 ஏப்ரல் 2022, 2:57 am

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையானது தலா 76 பைசா இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ100.94-க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த 16 நாள்களில் 14ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. நாடு முழுவதும் கடந்த 16 நாள்களில் பெட்ரோல் விலை ரூ. 9.45, டீசல் விலை ரூ. 9.51 அதிகரித்துள்ளது.

2020 நவம்பர் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்காமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.