மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரின் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் காயமடைந்தார்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்பாராவில், பாஜக வேட்பாளர் பவன் சிங்கின் இல்லத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த வீரர் யோகேஷ் சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மூத்த பாஜக தலைவர் அர்ஜுன் சிங்கின் மகனான சிங்கின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், சர்மாவின் காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதனிடையே வடக்கு 24 பர்கானாஸில் தாக்குதல் மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களிடையே மோதல்கள் வெடித்தன.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினர். 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப். 23-ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது. இதையொட்டி ஆளும் திரிணமூல், எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சியினர் இறுதிகட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Summary
A CISF jawan was injured in firing outside the residence of BJP candidate Pawan Singh at Bhatpara in North 24 Parganas district of West Bengal, prompting the Election Commission to seek a report, officials said on Monday, PTI reported.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்னாப்பிரிக்கா: குடியிருப்புப் பகுதியில் மா்ம கும்பல் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு

சாகேத்தில் கட்டுமானதாரரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!

மேற்கு வங்கம்: மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




