மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 294 தொகுதிகளில் ஒரு முஸ்லிம் வேட்பாளரைகூட பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கவில்லை.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை புதன்கிழமை வெளியிட்டது.
மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்திருக்கும் நிலையில், அவற்றில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் பெயர்கூட இல்லை.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 8 முஸ்லிம் வேட்பாளர்களையும், 2016-ல் 3 வேட்பாளர்களையும் பாஜக களமிறக்கியிருந்தது. ஏற்கெனவே போட்டியிட்ட அந்த வேட்பாளர்களுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே, “ஒரு சமூகத்தின் மீதான பொறுப்பு, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில் இல்லை என்று கட்சி நம்புகிறது. வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர்கள் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்று பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாக காங்கிரஸ் 78, திரிணமூல் காங்கிரஸ் 47, இடதுசாரிகள் 26 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளனர்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது.
Summary
West Bengal: Not a single Muslim among the BJP candidates!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000; பொது சிவில் சட்டம்! மேற்குவங்க பாஜக வாக்குறுதிகள்!

மே.வங்கத்தில் இஸ்லாம்பூர் உள்ளிட்ட இடங்களின் பெயர்கள் மாற்றப்படும்! - நிதின் நவீன் வாக்குறுதி!
மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லை!

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக: மமதா குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


